கொரோணா பெருந்தொற்றில் பொதுமக்களைப் போன்று சுகாதாரத்துறையும் தன் சேவையை வழங்குவதில் பெருஞ்சிரமங்களை தினமும் எதிர்கொண்டு வருவதை யாவரும் அறிந்திருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் இரத்ததான முகாமை ஒழுங்கு செய்வதில் தடங்கல்கள் இருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் குருதித்தட்டுப்பாடு நிலவுவதால் அதன் அன்றாட சத்திரசிகிச்சைகள் மற்றும் குருதி பாய்ச்சும் அன்றாட, அவசத்தேவையுடைய நோயாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாக வேண்டிய நிலையில் உள்ளனர்.
குருதித்தானம் செய்யவிரும்புவோர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிக்கு நேரடியாக காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை வருகை தந்து உங்கள் பெறுமதியான இரத்தத்தை தானம் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!
சிறுவர் பிரிவு
ஆதார வைத்தியசாலை
அக்கரைப்பற்று.
Reviewed by Editor
on
August 25, 2021
Rating:

