முதல்வரினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இன்னும் சில வீதிகள்!!!

(றிஸ்வான் சாலிஹு)

அரசின்"சுபீட்சத்தின் நோக்கு" ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஹிஜ்ரா வீதி(சம்சுல் உலூம் வித்தியாலயத்தில் இருந்து காதிரிய்யா கடற்கரை வீதி மற்றும் அதனை அண்டிய வீதிகள்) மற்றும் பதூர் பள்ளி கிழக்கு வீதிகளின் (கிழக்கு வாசல் வீதி தொடக்கம் பொத்துவில் வீதி) அபிவிருத்தி நிர்மாண பணிகள் நேற்று (12) வியாழக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.சஹாப்தீன், ஏ.கே.பாஹிம், வட்டார முக்கியஸ்த்தர்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








முதல்வரினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இன்னும் சில வீதிகள்!!! முதல்வரினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இன்னும் சில வீதிகள்!!! Reviewed by Editor on August 13, 2021 Rating: 5