(றிஸ்வான் சாலிஹு)
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில் அட்டாளைச்சேனை சர்வமத குழு மற்றும் ருகுனுலங்கா அமைப்பினர் இணைந்து அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு 10 Covid PPE Kit இனை பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக் அவர்களிடம் வழங்கினார்கள்.
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் கே.எல்.நக்பர், ருகுனுலங்கா அமைப்பின் தலைவர் எம்.எஸ்.ஜவ்பர், செயலாளர் யூ.எல்.பஸீல், ஆலோசகர் ஏ.எல்.தௌபீக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொரோனாவின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும் பலதரப்பட்ட மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தும் அவர்களை தேடிச் சென்று களப்பணி புரியும் இந்த அமைப்பினருக்கு பிரதேச சபை சார்பிலும் தனது தனிப்பட்ட ரீதியிலும் நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 13, 2021
Rating:
