(றிஸ்வான் சாலிஹு)
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியும், முன்னாள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய ஏ.பீ.எம்.அஷ்ரப் அவர்கள், எம்பிலிப்பிட்டியில் அமைந்துள்ள தலைமைத்துவ அபிவிருத்திக்கான தேசிய மையத்தின் (National Centre for Leadership Development) பணிப்பாளராக நேற்று (09) திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் சமய விவகாரங்களுக்குள் சுருங்கிப் போயிருந்த திணைக்கள செயற்பாடுகளை, தனது பதவிக்காலத்தில் கலை, இலக்கியம், பண்பாடு நோக்கி விரிந்த தளத்தில் நகர்த்தியதில் அவருக்குப் பெரும் பங்கு இருப்பதோடு, பல நிர்வாக சீர்திருத்தங்களையும் முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 10, 2021
Rating:

