நிந்தவூர் மக்களால் வாழ்த்தி கெளரவிக்கப்பட்ட பிரதேச செயலாளர் அன்சார் (நளீமி)

நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி காத்தான்குடியைச்சேர்ந்த           ரீ.எம்.எம்.அன்சார் (நளீமி) அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, ஜமியத்துல் உலமா நிந்தவூர் கிளை, ஜாமிவுத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்வா சமூக சேவைகள் அமைப்பு, நிந்தவூர் நலன்புரிச் சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இன்று (240 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எஸ்.எம்.பி.எம்.பாறூக் இப்ராஹிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின், கடந்த சுமார் 4 வருடங்களாக பிரதேச செயலாளராக இருந்து மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி இந்த மக்களின் தேவைகளை நன்கறிந்து, அலுவலகம் மூலம் இந்த சமூகத்திற்கு தேவையான அனைத்து காரியங்களையும் செம்மையாக செய்து இன்றுடன் இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் அன்சார் அவர்களுக்கு இவ்வூர் மக்கள் சார்பில் நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



நிந்தவூர் மக்களால் வாழ்த்தி கெளரவிக்கப்பட்ட பிரதேச செயலாளர் அன்சார் (நளீமி) நிந்தவூர் மக்களால் வாழ்த்தி கெளரவிக்கப்பட்ட பிரதேச செயலாளர் அன்சார் (நளீமி) Reviewed by Editor on August 24, 2021 Rating: 5