பொலநறுவை பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கு அருகில் நடைபாதை ஒன்று அமைக்கும் அரசின் செயற்பாட்டிற்கு எதிராக நேற்று (27) வெள்ளிக்கிழமை பௌத்த பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரச நிறுவனங்களின் அனுமதியுடன் 34 மில்லியன் ரூபா செலவில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த நடைபாதை அமைப்பதானது சமுத்திரத்தின் அணைக்கட்டுக்கு பாதிப்பாக அமையும்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், மிகவும் இரகசியமாக என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என்பது தெரியவரவில்லை என பிக்குகள் தெரிவிக்கின்றனர்.
இரகசிய செயற்பாட்டுக்கு எதிராக வீதியில் இறங்கிய பிக்குகள்
Reviewed by Editor
on
August 28, 2021
Rating:
Reviewed by Editor
on
August 28, 2021
Rating:



