யானைகட்டிய பணிக்கர்கள் இருந்ததைப் போல் மாடுகட்டிய போடிமாரும் வாழ்ந்திருக்கிறார்கள் - உபதவிசாளர் நெளபர் மெளலவி

இறக்காமம் அம்பாரை மாவட்டத்தின் ஒரு பழமைவாய்ந்த  ஊராகும். யானை கட்டிய பணிக்கர்கள் வாழ்ந்த ஊர் என வரலாறு இருப்பதைப் போல், ஏராளமானவர்கள் பட்டிக் கணக்கான மாடுகளை இறக்காமத்து குளத்தை அண்டிய பகுதிகளை மேய்ச்சல் தாரையாக கொண்டு  போடிமாரும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் மெளலவி ஏ.எல்.நெளபர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1850ஆம் ஆண்டில் இருந்து இன்று வரைக்கும் அவர்களின் பரம்பரை, பரம்பரையாக இதனை செய்து வருகிறார்கள். 1850 முதல் 1980 ஆண்டு வரை இறக்காமத்தில் 45  போடிமார்களும், வரிப்பத்தான் சேனையில் 10 போடிமார்களும் இருந்திருக்கிறார்கள் என்று வரலாறு உள்ளது.

இவர்கள் ஒவ்வொருவரும்  100--500 வரையிலான மாடுகளை பராமரித்து வந்துள்ளார்கள். மொத்தமாக 5000 மேற்பட்ட மாடுகளை குளத்தை அண்டிய பகுதியான கட்டுவால், கொக்குளான்கால், பூப்பத்தை, முனைப்புட்டி பகுதிகளை மேய்ச்சல் தாரையாக கொண்டு மாடுகளை பராமரித்து வந்துள்ளார்கள்.

இவர்களில் "மாடுவெட்டுப் பொலியான" என்பவர் 500 க்கு குறையாத எருமை மாடுகளை வைத்திருந்தார் என்றும், அதேபோல் மர்ஹும்களான சுலைமாலெப்பை (சுக்குருவர்) கலந்தர் லெப்பை பணிக்கர், வெல்லயர் பரிசாரி, கலந்தர் லெப்பை மரைக்காயர், இஸ்மா லெப்பை (பாம்பு பரிசாரி), முகம்மது மரைக்கார்(கொட்டாம் மரைக்காயர்), ஆதம் லெப்பை (லெச்சர்), மீராசாஹிபு, சீனித்தம்பி உதுமா லெப்பை (மஞ்ஞகண்ணர்),ஒட்டு காட்டு வட்டானை, உமர் லெப்பை (ஆலிமு), இஸ்மாலெப்பை மரைக்காயர் (நூறியர்) சரிபுத்தம்பி (மஜிது வட்டானை வாப்பா) கொழுவர்ர பிச்சை, சதக்கர், முத்தலிப், ரசீது ஹாஜியார், அமானம் போடியார், இஸ்மா லெப்பை கலந்தர், மீராலெப்பை பணிக்கர், மீரான் போடி, செயின் ஹாஜியார் மீராமுஹிடீன் ஹாஜியார், போன்றவர்களை முதன்மையானவர்களாக குறிப்பிட முடியும்.

மேற்கூறிய போடிமார்களின் பரம்பரையில் உருவான அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டிப் பிள்ளைகள் என பரம்பரையாக மாடு வளர்ப்பில் இன்று வரைக்கும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.

எனவே எமது குளமும் அதனை அண்டிய பகுதிகளும் (கட்டுவால், கொக்குளான்கால், பூப்பத்தை, முனை) என்பன மேய்ச்சல் தாரையாக இருந்துள்ளது என்பது வரலாறு.

இருப்பினும் குறிப்பிட்ட சில வருடங்களாக, அதிகாரிகளின் அசமந்தப்போக்கு, அரசியல் வாதிகளின் அதிகாரம், என்பன கிட்டத்தட்ட  (150) வருடங்களாக  மேய்ச்சல் தரைக்கு பாவிக்கப்பட்டு வந்த நிலங்கள் திட்டமிட்ட அடிப்படையில்  விவசாய காணிகளாக மாற்றப்பட்டு வருவதை காணமுடிகிறது.

எனவே உரிய அதிகாரிகளான பிரதேச செயலாளர், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர், பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், விவசாய குழுக்கள் என்பன இணைந்து உரிய தீர்வை அவசரமாக  பெற்றுத்தரும்படி கால்நடை பண்ணையாளர்கள், விவசாயிகள் எதிர்பார்கின்மை குறிப்பிடத்தக்கது.





யானைகட்டிய பணிக்கர்கள் இருந்ததைப் போல் மாடுகட்டிய போடிமாரும் வாழ்ந்திருக்கிறார்கள் - உபதவிசாளர் நெளபர் மெளலவி யானைகட்டிய பணிக்கர்கள் இருந்ததைப் போல் மாடுகட்டிய போடிமாரும் வாழ்ந்திருக்கிறார்கள் - உபதவிசாளர் நெளபர் மெளலவி Reviewed by Editor on August 28, 2021 Rating: 5