அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு - மருத்தக உரிமையாளர்கள்

கடந்த 19ம் திகதி சுகாதார அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் ஒன்பது வீதத்தினால்  அதிகரித்துள்ளதாக மருந்தகங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசிற்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகளிள் விலைகளும் நீரிழிவு மற்றும் ஏனைய ஆபத்தான நோய்களிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகளும்  அதிகரித்துள்ளதாக இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

60 அத்தியாவசிய மற்றும் பொதுப்பயன்பாட்டில் உள்ள மருந்துகளிற்கான விலைகளை நிர்ணயித்து சுகாதார அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

(தினக்குரல்)









அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு - மருத்தக உரிமையாளர்கள் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு - மருத்தக உரிமையாளர்கள் Reviewed by Editor on August 22, 2021 Rating: 5