சிறுவர் அபிவிருத்தி நிதியத்தால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட பிரதேச செயலாளர் றஸான்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக அர்ப்பணிப்புடன் கடமையாற்றி  புதன்கிழமை (25) முதல் இறக்காமம் பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான்  அவர்களின் சேவையை பாராட்டி "சிறுவர் அபிவிருத்தி நிதியம்" (CDF) ஏற்பாடு செய்த கெளரவிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை  (24) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் என்.எம்.நஜீமுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிதியத்தின் ஆலோசகரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான யூ.எல்.எம்.ஹாசீம், செயலாளர் எம்.பி.றஸ்மியா, பொருளாளர் ஏ.எம்.றம்ஸானா மற்றும் மாநகர சபை உறுப்பினரும் பொத்துவில் வீதி அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவருமான அல்-ஹாஜ் ஏ.சீ.பதுருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக சுமார் 09 வருடங்களாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி இந்த மண்ணின் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரினதும் மனங்களில் இடம்பிடித்த இவரின் சேவையை பாராட்டி கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கி இந்த அமைப்பினரால் அவர் கெளரவிக்கப்பட்டார்.

இவ்நிதியமானது சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உரிமை, மேம்பாடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சிறுவர்கள் தொடர்பான சகல பிரச்சினைகளையும் ஆராய்ந்து தீர்த்து வைப்பதோடு அதற்கான சகல விதமான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் இந்த அமைப்பு இலங்கை பூராகவும் இவர்களின் சேவை செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.











சிறுவர் அபிவிருத்தி நிதியத்தால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட பிரதேச செயலாளர் றஸான் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட பிரதேச செயலாளர் றஸான் Reviewed by Editor on August 24, 2021 Rating: 5