நிலைமை கைமீறினால் நாடு லொக்டவுன் செய்யப்படலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை..!

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் பரவல் பாரதூரமான நிலைமையை அடைந்தால் மாற்றுவழியாக முடக்கத்துக்கான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (04) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டில் தற்போதுள்ள கொவிட்-19 நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முடக்கங்கள் இன்றி பொருளாதாரம்சார் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எவ்வாறிருப்பினும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்போது மாற்று வழியாக முடக்கம் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும்.

மேலும், இந்தியாவைப் போன்று வாகனங்களிலிருந்து கொண்டு சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார தரப்பிற்கு இதனை தனித்து கட்டுப்படுத்த முடியாது என்றார்.



நிலைமை கைமீறினால் நாடு லொக்டவுன் செய்யப்படலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை..! நிலைமை கைமீறினால் நாடு லொக்டவுன் செய்யப்படலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை..! Reviewed by Editor on August 04, 2021 Rating: 5