தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா!!!!


(றிஸ்வான் சாலிஹு)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் ஏற்பாட்டில் இன்று (04) புதன்கிழமை காலை முப்பெரும் விழா தொழில்நுட்பவியல்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில், பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.




தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த ஆறாண்டுகள் உபவேந்தராக பணியாற்றி எதிர்வரும் 8ஆம் திகதியுடன் பல்கலைக்கழகத்திலிருந்து விடை பெற்று செல்லும் பேராசிரியர் எம்.எம்.எம் நாஜீம் அவர்களை வாழ்த்தி கௌரவித்து வழியனுப்புதலும், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியும் எதிர்வரும் 9ஆம் திகதியன்று பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பதவியேற்கவுள்ள பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களை பீடத்தின் சார்பில் வரவேற்றலும், தொழில்நுட்பவியல் பீடத்தின் ஸ்தாபக பீடாதிபதியாக பணியாற்றிய கலாநிதி எம்.ஜீ.முஹம்மட் தாரீக் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்குமான மூன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற்றது.





விடைபெற்று செல்லும் உபவேந்தர், எதிர்வரும் வாரம் பதவியேற்கும் புதிய உபவேந்தர் மற்றும் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி ஆகியோரின் சேவைகளை நினைவு கூர்ந்து ஞாபகபடுத்தியதோடு பொன்னாடையும் போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.













இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், புதிய உபவேந்தர் ஏ.றமீஸ், தொழில் நுட்பவியல் பீடத்தின் ஸ்தாபக பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ.முஹம்மட் தாரீக், தாவரவியல் தொழில் நுட்பவியல் திணைக்கள தலைவர் கலாநிதி ஏ.என்.எம்.முபாரக், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் திணைக்கள தலைவர் ஜனாப் கே.எம்.றிப்தி, சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் கல்வி சார் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டதோடு, நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இன்றைய நிகழ்வின் கதாநாயகர்களை வாழ்த்தி பாடல்களும், கவிதைகளும் இசைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா!!!! தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா!!!! Reviewed by Editor on August 04, 2021 Rating: 5