ஒருமாத சம்பளத்தை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத  சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு  கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரமதாஸ அவர்களின் தலைமையில் வழங்க தீர்மானித்துள்ளனர் என்று கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமதாஸ ஆரம்பிக்கவுள்ள இந்த விசேட நிதியத்திற்கு கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்திய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக தங்கள் ஒருமாத கால சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.




ஒருமாத சம்பளத்தை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் தீர்மானம் ஒருமாத சம்பளத்தை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் தீர்மானம் Reviewed by Editor on August 22, 2021 Rating: 5