2021 IPL போட்டித்தேர்வுக்கு பெங்களூரு அணி புதிய வீரர்களை தெரிவு செய்து வருகிறது.
இதில் முக்கிய வீரராக தற்போது அவுஸ்திரேலிய உள்ளூர் தொடர்களில் கலக்கி வரும் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட டிம் டேவிட்டை ஆர்.சி.பி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சிங்கப்பூர் வீரர் ஒருவர் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது முதற்தடவையாகும்
சிங்கப்பூரில் பிறந்த 25 வயதான டிம் டேவிட் சிங்கப்பூர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பின்வரிசையில் இறங்கி அதிரடியாக விளையாடும் இவர் 558 ஓட்டங்களை பெற்றுள்ளார். பின்னர் சிங்கப்பூரில் இருந்து குடிபெயர்ந்த அவர் குடியுரிமை பெற்று அங்கு நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இவர் பின்வரிசையில் தனி நபராக நின்று பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 22, 2021
Rating:
