பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அத்தியாவசிய சேவை அனுமதிப்பத்திரம் இரத்து

(சம்சுல் ஹூதா)

பொத்துவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட அத்தியாவசிய சேவை போக்குவரத்து அனுமதிப்பத்திரம் (26) வியாழக்கிழமை முதல் வழங்கப்படமாட்டாது என்று பொத்துவில் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், பொது மக்களாகிய நீங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் பொழுது அத்தியாவசிய தேவைக்கான உரிய ஆவணங்களினை பாதுகாப்புப் பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சமர்ப்பித்து அவர்கள் உறுதிப்படுத்திய பின்னரே பயணங்களை தடையின்றி தொடர முடியும் என்று பிரதேச செயலகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோதனைச் சாவடிகளில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் நிர்வாக உத்தியோகத்தர் (கிராம நிலதாரி -076 010 3949) மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் (0760994132) ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அத்தியாவசிய சேவை அனுமதிப்பத்திரம் இரத்து பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அத்தியாவசிய சேவை அனுமதிப்பத்திரம் இரத்து Reviewed by Editor on August 26, 2021 Rating: 5