11 வயது சிறுவனுக்கு பிரதம பிக்குவால் நேர்ந்த கொடூரம்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த 11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விகாரையின் பிரதம பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். வேறொரு மாவட்டத்தை சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் நீண்டகாலமாக குறித்த பிரதம பிக்கு அந்த சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



11 வயது சிறுவனுக்கு பிரதம பிக்குவால் நேர்ந்த கொடூரம் 11 வயது சிறுவனுக்கு பிரதம பிக்குவால் நேர்ந்த கொடூரம் Reviewed by Editor on August 25, 2021 Rating: 5