மு.கா தேசிய அமைப்பாளர் பதவியை மறுத்தது யார் ? ஏன் அது தௌபீக் எம்பிக்கு வழங்கப்பட்டது ? தலைவரின் எதிர்பார்ப்பு என்ன ?

(முஹம்மது இக்பால்)

இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் போராளிகள் தொடர்ந்து வலியுருத்திக்கொண்டிருந்த நிலையில், எம்.எஸ். தௌபீக் எம்பிக்கு மு.கா தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கட்சி யாப்பின் பிரகாரம் தேசிய அமைப்பாளர் கட்சியிலிருந்து விலகினால், பேராளர் மாநாட்டில் புதியவர் நியமிக்கப்படும் வரைக்கும், பிரதி தேசிய அமைப்பாளரே பதில் தேசிய அமைப்பாளராக கடமையாற்ற வேண்டும். 

ஆனால் திடீரெனே தனது விசுவாசியான தௌபீக் அவர்களுக்கு இப்பதவி வளங்கியதானது தலைவர் கட்சியின் யாப்பை மீறியுள்ளார் என்பது புலனாகின்றது. 

2011இல் கல்முனை மாநகர முதல்வர் பதவிக்காக சிராஸ் மீராசாஹிபுக்கும், நிசாம் காரியப்பருக்கும் போட்டி நிலவியபோது, உடனடியாக தீர்மானம் மேற்கொண்டிருந்தால், சாய்ந்தமருது - கல்முனைகுடி ஆகிய இரு ஊர்களுக்குமிடையில் பிரதேசவாதம் உச்ச நிலையை அடைந்து கட்டிடங்கள் உடைக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்காது. 

தற்போது பிரதி தேசிய அமைப்பாளராக இருக்கின்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் தன்னை “பதில் தேசிய அமைப்பாளர்” என்ற அடையாளத்துடன் பெருநாள் வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தார். இதனை சகித்துக்கொள்ள முடியாத சிலர் அதாவது காலை ஆறு மணிக்கு தொலைபேசி மூலம் தலைவருக்கு மற்றவர்களை பற்றி கோள் சொல்லுகின்ற சாய்ந்தமருதை சேர்ந்த சிலர் அப்பதவி சாய்ந்தமருதுக்கு கிடைக்காமல் வேறுபக்கம் திசை திருப்பப்படல் வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்திருந்தனர். 

இது தலைவருக்கு இனிப்பான கருத்தாக இருந்தது. அதனால் நேற்று காத்தான்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் அம்பாறை மாவட்டத்துக்கு தேசிய அமைப்பாளர் பதவியை தர முடியாது என்று தலைவர் ஜெமீலிடம் கூறியிருந்தார். 

அதேநேரம் தேசிய அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பைசால் காசிமை தலைவர் நேற்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் தலைவரின் கோரிக்கையை பைசால் காசிம் மறுத்துவிட்டார். 

ஜெமீல் - பைசால் காசிம் ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த நெருக்கத்தை உடைப்பதற்காகவே அப்பதவிக்காக பைசால் காசிமை வலியுறுத்தியதற்கு காரணமாகும்.   

அதன்பின்பே இந்த பதவி தௌபீக் எம்பிக்கு வழங்குவதாக இன்று காலை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது கட்சியின் தீர்மானம் அல்ல. இது தலைவரின் தனிப்பட்ட முடிவு. 

கட்சியில் ஏதாவது உயர் பதவிகள் வழங்குவதென்றால் அவர் கடினமில்லாதவராக அல்லது அப்பாவியாக அல்லது வடகிழக்கு இனப்பிரச்சினை பற்றிய சமூக அரசியல் தெரியாதவராக இருக்க வேண்டும்.

தௌபீக் எம்பி அவர்களுக்கு சமூக அரசியல் தெரியாது. அவர் காரியாலயங்களில் ஏறி இறங்கி கொந்தராத்து, கட்டிடம் போன்ற எடுபிடி வேலைகளை வேகமாக செய்வார்.

ஆனால் தலைவர் யாருக்கும் அதிகாரம் வழங்குவதில்லை. தனது கட்டுப்பாட்டின் கீழேயே அனைத்து அதிகாரங்களையும் வைத்துள்ளார். அவ்வாறு அதிகாரத்தை மீறகூடியவர்களுக்கு பதவி வழங்கப்படுவதில்லை. 

இதுவரையில் இருந்த தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் அவர்கள் பேராளர் மாநாட்டில் சாப்பாட்டு பார்சலும், குடிநீர் போத்தல்களும் விநியோகிப்பவராகவே இருந்தார். அப்படியான ஒருவரேயே தலைவர் இந்த பதவிக்கு எதிர்பார்த்தார். அதனால் தௌபீக் எம்பி இந்த பதவிக்கு பொருத்தமானவர். 

வெளிப்பார்வையில் அதிகாரம் தலைவரிடம் உள்ளதாக தென்பட்டாலும், அதன் செயல்வடிவங்கள் அனைத்தும் அவரது சகோதரரிடமே உள்ளது. 

அதாவது கட்சியின் ஒரு தேசிய அமைப்பாளருக்குரிய அமைப்பு வேலைகள் அனைத்தையும் தலைவரின் சகோதரரே முன்னின்று செய்வது வழக்கம். இதனை பல முறை நான் விமர்சித்துள்ளேன். 

ஆனால் ஜெமீல் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தால் அவ்வாறு தலைவரின் சகோதரரினால் தலையிட முடியாமல் இருந்திருக்கும். இதனையெல்லாம் உணர்ந்துதான் தௌபீக் எம்பிக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.  

எது எப்படி இருப்பினும் ஒருவருக்கு எம்பி என்னும் அரசியல் அதிகாரம் இருந்தால், இன்னுமொருவருக்கு கட்சி அதிகாரம் வழங்கும்போது அங்கே அதிகார சமநிலை ஏற்படும். இந்த அறிவு தலைவருக்கு இருக்குமா என்பதுதான் இன்றைய கேள்வியாகும். 

எனவே,தௌபீக் எம்பிக்கு வழங்கிய பதவியானது தலைவரின் சகோதரருக்கு வழங்கிய பதவி என்பதில் எந்தவித ஐயமுமில்லை.  




மு.கா தேசிய அமைப்பாளர் பதவியை மறுத்தது யார் ? ஏன் அது தௌபீக் எம்பிக்கு வழங்கப்பட்டது ? தலைவரின் எதிர்பார்ப்பு என்ன ? மு.கா தேசிய அமைப்பாளர் பதவியை மறுத்தது யார் ? ஏன் அது தௌபீக் எம்பிக்கு வழங்கப்பட்டது ? தலைவரின் எதிர்பார்ப்பு என்ன ?  Reviewed by Editor on August 01, 2021 Rating: 5