(முஹம்மட் நளீர்)
தேசிய பயிலுனர், மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் திரு. தரங்க நளீன் கம்லத் அவர்கள் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரிக்கு நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
தொழில் நுட்பக்கல்லூரிஅதிபர் திரு.எம்.சோமசூரியம் தலைமையிலான கல்லூரியின் உத்தியோகத்தர்களால் அவர் வரவேற்பளிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வு கொவிட் காரணமாக ஆடம்பரமான நிகழ்வுகளைத் தவிர்த்து எளிமையான முறையில் நடந்தேறியது.
மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு தேவையான தேவைப்பாடு மற்றும் கல்லூரியின் தேவைப்பாடுகள் தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் அதிகார சபை தலைவரிடம் அதிபர் திரு.சோமசூரியம் கையளித்தார்.
இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் எந்திரி யூ.கே.எம்.முஸாஜீத், தொழில் நுட்பக் கல்லூரியின் பதிவாளர் ஐ.பியாஸ், விரிவுரையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 01, 2021
Rating:




