(றிஸ்வான் சாலிஹு)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று (09) திங்கட்கிழமை காலை வேளையில் உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழகத்தில் பதவியேற்றார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக இருந்த இவரே தற்போது உபவேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் அவர்கள், இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இதே பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பல்கலைக்கழக பதிவாளர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Reviewed by Editor
on
August 09, 2021
Rating:



