நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று நோயிலிருந்து இறக்காமம் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுவின் விஷேட கூட்டம் பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் நேற்று (26) வியாழக்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கொரோனா தொற்று நோயிலிருந்து இறக்காமம் பிரதேசத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதோடு, மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், பிரதேச சபை செயலாளர் எம்.ஏ. இர்பான், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். ஜௌஸ், நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல். ஜமீல், கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் எச்.பி.டி. ஹெசேரத் பண்டார, உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சலீம் (மௌலவி) உற்பட பிரதேச செயலக கொரோனா பாதுகாப்புச் செயலணிக் குழு உறுப்பினர்கள், இறக்காமம் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் அஷ்ஷெய்க் ஏ.கே. அப்துல் ரஊப், வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷெய்க். அ. அப்துல் ஹாமிது (மதனி), ஜாமிஉத் தையார் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ. எஹியால், ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச். வஹாப் (இஸ்லாஹி), மாணிக்கமடு பிள்ளையார் ஆலைய குருக்கள் திரு. காண்டீபன், இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.வை.ஜௌபர், இறக்காமம் சிவில் பாதுகாப்பு படை பொறுப்பதிகாரி ஜே. றஹீம் உள்ளிட்ட கொரோனா செயலணிக் குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
Reviewed by Editor
on
August 27, 2021
Rating:
