(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் நேற்று வியாழக்கிழமை முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாதவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நிகழ்வும் இரண்டாவது நாளாகவும் இன்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம், பதுர் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் நூறானியா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகிய மூன்று இடங்களிலும் இவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறுவதோடு, இப்பிரதேசத்தை சேர்ந்த மூத்த பிரஜைகள் தங்களையும் தங்களின் எதிர்கால சந்ததியினரையும் இந்த கொவிட் தொற்றியிருந்து பூரணமாக பாதுகாப்பு பெறும் நோக்கில் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு வருகை தந்து தடுப்பூசியை ஏற்றினார்கள்.
தங்களது வாகனங்கள் மூலம் தடுப்பூசி நிலையங்களுக்கு வருகை தரும் மூத்த பிரஜைகளில் சிலர் இறங்கி வரமுடியாமல் இருப்பவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் தங்களது சேவைகளை அர்ப்பணித்து அவ்விடங்களுக்கு சென்று தடுப்பூசி வழங்குவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேசத்தை கொவிட் தொற்றியிலிருந்து முற்று முழுதாக இல்லாதொழிக்கும் இந்த செயற்திட்டத்திற்கு அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் "அனர்த்த முகாமைத்துவ குழு", சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் அவர்களின் கீழுள்ள உத்தியோகத்தர்கள் குழுவுடன் இவர்களும் இணைந்து தங்களது பங்களிப்பையும், சுகாதார துறையினருக்கு உதவிகளையும் செய்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 27, 2021
Rating:








