பாராளுமன்ற ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டார்.
அதற்கான நியமனக் கடிதம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
2021 செப்டம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
(பிரதமர் ஊடக பிரிவு)
Reviewed by Editor
on
August 26, 2021
Rating:
