(றிஸ்வான் சாலிஹு)
நமது சிரேஸ்ட பிரஜைகளினையும், நேசிக்கும் உறவுகளினையும் பாதுகாக்க உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ள முடியும்.
தொற்றாளர்களாக உங்களுக்கு ஏதும் அறிகுறிகள் தென்படின் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நீங்களாக முன்வந்து அன்டிஜன் பரிசோதனை ஒன்றினை செய்து கொள்ள முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நோய் அறிகுறிகளற்ற தொற்றாளர்களாக நீங்கள் அடையாளம் காணப்படின் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் நீங்களாக இருப்பதன் மூலமும் உங்கள் உறவுகளினை இழப்பிலிருந்து நீங்கள் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், நாளை (24) செவ்வாய்க்கிழமை முதல் உங்களுக்காக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் தினமும் "அன்டிஜன்" பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதோடு மேலதிக தகவல்களுக்கு 0672277431 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் டாக்டர் காதர் மேலும் தெரிவித்துள்ளார்.
