தனது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முழுதுமாக கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் நேற்று ( 22) ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதோடு, உயிரிழப்புக்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றை தடுக்கும் வகையில் அரசு தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நாட்டின் நிலைமையினை கருத்திற்கொண்டு மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வதில் அக்கறையோடு செயல்படவேண்டும்.
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது, ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருப்பது, அத்தியவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்வது போன்ற சுய பாதுகாப்பு விடயத்தில் மக்கள் மிக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
August 23, 2021
Rating:
