(றிஸ்வான் சாலிஹு)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் பல குடும்பங்கள் தொழிலும் இன்றி மிக சிரமத்துக்கு மத்தியில் வாழ்க்கைச்சுமையை கஷ்டத்தோடு எதிர்கொள்ளும் சில குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் ஒன்றினை Iconic Youths அமைப்பு மேற்கொண்டு வருகின்று என்று அமைப்பின் தலைவர் உ.மு.தில்ஷான் தெரிவித்தார்.
அதனடிப்படையில், கடந்த வாரம் 10பேருக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதை போன்று இம்முறையும், அவ்வாறான மேலும் 10 குடும்பங்களுக்கு தேவையான 1200 ரூபா பெறுமதியான பொருட்கள் இறைவன் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை (05) காலை இந்த அமைப்பின் வாலிபர்களால் உரியவர்களின் கைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.
இதற்காக உதவி புரிந்த அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சகோதரருக்கு அமைப்பின் தலைவர் நன்றி தெரிவிப்பதோடு, மேலுல் இவ்வாறான எத்தனையோ குடும்பங்கள் எம்மத்தியில் வாழ்வதனால் உங்களுடைய செல்வத்தின் ஒரு சிறுதொகையை அவர்களுக்காக கொடுக்க நீங்களும் முன்வாருங்கள் என்று அமைப்பின் தலைவர் தில்ஷான் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
September 06, 2021
Rating:


