தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மொழிப்பெயர்ப்பாளராக இருந்த 'ஜோர்ஜ் மாஸ்டர்' உயிரிழந்தார்

(அஸ்ரி இப்னு அமீர்)

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ மொழிப் பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் மாஸ்டர் எனப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்  தமது 85 வயதில் நீண்ட காலம் சுகயீனம் அடைந்திருந்த நிலையில் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

1936ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி பிறந்த அவர், அஞ்சல் அதிபராக பல்வேறு மாகாணங்களிலும் செயற்பட்டிருந்தார். அதன் பின்னர்,1994 ஆம் ஆண்டு அஞ்சல் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்தார்.

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் 2016 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி ஜோர்ஜ் மாஸ்டர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மொழிப்பெயர்ப்பாளராக இருந்த 'ஜோர்ஜ் மாஸ்டர்' உயிரிழந்தார் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மொழிப்பெயர்ப்பாளராக இருந்த 'ஜோர்ஜ் மாஸ்டர்' உயிரிழந்தார் Reviewed by Editor on September 05, 2021 Rating: 5