அக்கரைப்பற்றில் 20-30 வயதினருக்கு கொவிட் தடுப்பூசி ஆரம்பம்

(றிஸ்வான் சாலிஹு)

கல்முனை சுகாதார பிராந்தியத்தின் கீழுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் 20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (18) முதல் கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் குறித்த வயதினருக்கு இன்று (18) சனிக்கிழமை காலை முதல் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு, இன்று இச்செயற்திட்டதை சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து முன்னெடுத்து செல்வதோடு, இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தடுப்பூசியின் முக்கியத்துவம் அறிந்து மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் சுகாதார பணிமனைக்கு வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.









அக்கரைப்பற்றில் 20-30 வயதினருக்கு கொவிட் தடுப்பூசி ஆரம்பம் அக்கரைப்பற்றில் 20-30 வயதினருக்கு கொவிட் தடுப்பூசி ஆரம்பம் Reviewed by Editor on September 18, 2021 Rating: 5