25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு வழங்கல்

(எம்.என்.எம். அப்ராஸ்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கடல் கடந்து வாழ் கல்முனை உறவுகளினால் வழங்கி வைக்கப்பட்டது. 

நாட்டில் தற்போது கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு சில மருத்துவ உபகரணங்களின் அவசியத் தேவை கருதி  வைத்தியசாலையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ,"எமது உறவுகளை பாதுகாக்க நாமும் பங்காளராவோம்*" எனும் தொனி்பொருளில் கல்முனைக்கான வளைகுடா அமையத்தினால் (12,54,000) ரூபாய் பெறுமதியான Non-Intensive Ventilator (CPAP & BiPAP) - 01, Pulse oximeter - rossmax - 06 மற்றும் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த ஜப்பான் நாட்டில் வசிப்போரின் நிதி பங்களிப்புடன் (12,00,000 )ரூபாய் பெறுமதியான Non-Intensive Ventilator (CPAP & BiPAP) - 01 குறித்த மருத்துவ உபரணங்கள் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். றகுமான் அவர்களிடம் குறித்த அமைப்பின் உறுப்பினர்களால் (09) இன்று உத்தியோக பூர்வமாக அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதன் போது வைத்தியர்களான எம். எம். ஹபிலுல் இலாஹி , ஏ. ஆர். எம். ஹாரிஸ், ஏ. எல். பாறுக், என் . சுகைப் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் குறித்த அமைப்பினருக்கு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். றகுமான் தனது நன்றியினை தெரிவித்தார்.







25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு வழங்கல் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு வழங்கல் Reviewed by Editor on September 09, 2021 Rating: 5