கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார 3ஆம் வருட மாணவர்களினால் நடாத்தப்படும் மாபெரும் "விவாதச்சமர் 2021".

(என்.முஹம்மது சப்னாஸ்)

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார 3ஆம் வருட  மாணவர்களினால் நடாத்தப்படும் மாபெரும் "விவாதச்சமர் 2021". விவாத போட்டியின் இறுதிப் போட்டியானது சனிக்கிழமை (11) காலை 9.30 மணிக்கு பிரம்மாண்டமான முறையில் நிகழ்நிலை வாயிலாக "விவாதச்சமர் "என்ற முகப்புத்தகப்பக்கத்தின் ஊடாகவும் zoom தொழில்நுட்பத்தின் மூலமாகவும் நேரலையாக ஒளிபரப்பபட  உள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார மாணவர்கள் கலந்து கொண்ட 8 அணிகள் இப்போட்டியில் பங்கு பற்றி ஒரு மாத காலத்திற்கும் மேலாக பல சுற்றுக்ககளாக இடம்பெற்ற போட்டிகளில் நான்கு அணிகள் கால் இறுதிக்கு தெரிவு செய்யப்பட்டு அந்த நான்கு அணிகளில் இருந்து இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி நாளைய தினம் இம்மாபெரும் இறுதிப் போட்டி நடைபெற காத்திருக்கின்றது.

இறுதிப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை கொண்ட இரண்டு அணிகளான The debate master அணி மற்றும் சிங்கப்பெண்கள் அணி ஆகிய இரண்டு அணிகளும் போட்டியிட காத்திருக்கின்றன. 


சிங்கப்பெண்கள் அணி சார்பில்

1. சங்கவி யோகராஜா- 3அம் வருட மாணவி 

2. விஜிதா செல்வராசா- 1ஆம் வருட மாணவி

3. புவிதா செல்வராசா- 2அம் வருட மாணவி


The debate master அணி சார்பில், 

1. மோனிஷா குமரகுரு- 1ஆம் வருட மாணவி

2. சரோஜினி சந்திரகுமாரன்- 1ஆம் வருட மாணவி

3.ஜஃப்வர்  முஹம்மட் அஸ்கான்- 2ஆம் வருட மாணவன்


இம்மாபெரும் இறுதி விவாத போட்டியினை பார்வையிடுவதற்கு கிழக்குப் பல்கலைக்கழக விவாத சமர்குழுவும் மாணவர்களும் அன்புடன் அழைக்கின்றனர்.








கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார 3ஆம் வருட மாணவர்களினால் நடாத்தப்படும் மாபெரும் "விவாதச்சமர் 2021". கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார 3ஆம் வருட  மாணவர்களினால் நடாத்தப்படும் மாபெரும் "விவாதச்சமர் 2021". Reviewed by Editor on September 10, 2021 Rating: 5