நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல்

சனிக்கிழமை (11) காலை 8:00 மணிதொடக்கம் - 2:00 மணிவரை கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்-
1. சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்
2. நடமாடும் தடுப்புமருந்தேற்றல் சேவை
நடமாடும் தடுப்புமருந்தேற்றல் சேவையும் தொடர்ந்து இடம்பெற இருப்பதனால் இச்சேவையினைபெற இதுவரையிலும் பதிவுசெய்துகொள்ளாதோர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஹொட்லைன் தொலைபேசி இலக்கத்தினை (Hotline No: 0677284670) தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும்…

சனிக்கிழமை (11) காலை 8:00 மணிதொடக்கம் - 12:00 மணிவரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் AstraZeneca கொவிட் 19 இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை இரண்டாவது AstraZeneca தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
தகவல் .

டாக்டர் பறூசா நக்பர்
சுகாதார வைத்திய அதிகாரி
நிந்தவூர்



நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல் Reviewed by Editor on September 11, 2021 Rating: 5