அமைச்சின் செயலாளரினால் அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மரநடுகை நிகழ்வு

(றிஸ்வான் சாலிஹு, ஐ.எச்.ஏ.வஹாப்)

ஜனாதிபதியின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தில் கீழ் நாட்டின் பிரதான வீதிகளில் இருமருங்கிலும் பழம் தரும் மற்றும் நிழல் தரும் 20 இலட்சம் மரங்களை நட்டு அதனை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தற்போது முன்னெடுத்துள்ளது.

அதனடிப்படையில், அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியின் இருமருங்கிலும் மரநடுகை நட்டு அழகுபடுத்தும் வைபவம் இன்று (10) வெள்ளிக்கிழமை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண மேலதிகப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.பீ.அலியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரநடுகை வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில், நிறைவேற்று பொறியியலாளார்களான எம்.ஐ.நயீமுத்தீன், எம்.ஐ.ஏ.சஜீர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
















அமைச்சின் செயலாளரினால் அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மரநடுகை நிகழ்வு அமைச்சின் செயலாளரினால் அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மரநடுகை நிகழ்வு Reviewed by Editor on September 10, 2021 Rating: 5