செப்டம்பர் இறுதியாகும் போது கொரோனா தொற்று நிலை குறைவடையலாம் - கிழக்கு சுகாதார பணிப்பாளர்

( எம். என்.எம்.அப்ராஸ், நூருள் ஹுதா உமர், பாரூக் சிஹான்)


கிழக்கு மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலையில் இதுவரை மொத்தமாக 42784 நோயாளர்களும் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
மாகாணத்தில்  உள்ள 4 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுகளில் கொரோனா வைரசின் டெல்டாபிறழ்வு வைரஸின் தாக்கம் பரவலாக அதிகரித் துள்ளமை ஆய்வு கூட அறிக்கை மூலம் எமக்கு கிடைககப்பெற்றுள்ளது இதனால் கடந்த ஓகஸ்ட் மாதத்தின் மூன்றாம் நான்காம் வாரங்களில் கொரானா நோயாளர்களின்எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது .

இது செப்டம்பர் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை சிறிது குறைவு காணப்பட்டாளும் இது மேலும் குறைவடைவது பொது மக்களின்அன்றாட வாழ்வியல் ,இரண்டு தடுப்பூசியையும் பெறுவதிலும் ஏனைய தொற்றா நோய்களான சுவாச ,இருதய,நீரிழிவு போன்ற ஏணைய தொற்றா நோய்களை இவற்றை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்ஏனென்றால் இன் நோய்கள் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசியை பெறாதவர்கள்  , 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், அதிகமாக மரணம் சம்பவித்துள்ளது . 

டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம்.ஏனெனில் 2 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இதன் தாக்கம்குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது. தடுப்பூசிகளை நீங்கள் பெற்றுக்கொண்டாலும் இத்தாக்கங்களில் இருந்து பாதுகாக்க சில நாட்கள்செல்லும்.எனவே தேவையற்ற ஒன்று கூடல்களை தவிருங்கள்.முகக்கவசங்களை நேர்த்தியாகஅணியுங்கள்.சமூக இடைவெளிகளை பின்பற்றி கொள்ளுங்கள் மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இறுதிப் பகுதியாகும் போது தொற்று நிலை குறைவடையும் 
என எதிர்பார்க்கிறோம் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக்தெரிவித்தார்.

இன்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற சந்திப்பில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் இவர் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திக்கு தேவையான தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்கி கொண்டிருக்கிறது  30 வயதிற்கு மேற்பட்டவர்களின் இதனால்  இதுவரை முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியினை பெற்றுகொள்ள முடியும்.

30வய்திற்கும்  மேற்பட்டவர்களின் தடுப்பூசி வழங்க களில்இதுவரை கிழக்கு மாகாணத்தில் கிட்டத்தட்டமுதலாவது டோஸ்  90 வீதமானோரும் , இரண்டாவது டோஸ் 75 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்ப்பட்டுள்ளது.

மேலும் 20 வய்திற்கும் 30 வய்திற்கும்  உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி விரைவில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மிகவும் இறுக்கமாக பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். யுனிசெப் நிறுவனத்தினால் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு உபகரணங்கள்வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இதில் முகக்கவசம், முகத்திரை, பி.பி.ஈ. பாதுகாப்பு அங்கிகள், தொற்றுநீக்கி(சனிடைசர்), உட்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை கொண்ட பொதிகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு யுனிசேப் நிறுவனத்திற்கு சுகாதார அமைச்சு சார்பாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.




செப்டம்பர் இறுதியாகும் போது கொரோனா தொற்று நிலை குறைவடையலாம் - கிழக்கு சுகாதார பணிப்பாளர் செப்டம்பர் இறுதியாகும் போது கொரோனா தொற்று நிலை குறைவடையலாம் -  கிழக்கு சுகாதார பணிப்பாளர் Reviewed by Editor on September 10, 2021 Rating: 5