மதுபான நிலையங்களை திறக்கும் நடவடிக்கையால் என்னால் எனது தொகுதிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறந்த அறுவடையை எதிர்பார்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேகரித்து வந்த ஏரியை ஒரே முறையில் திறந்து விட்டு முழு அறுவடையும் நாசமாகியது போன்ற செயலாக இது அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தது என்பதை அறிய விரும்புவதாகவும் இது போன்ற செயல்களால் தன்னால் பாராளுமன்ற உறுப்பினராக கிராமத்துக்குச் செல்ல இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் மதுக்கடைகளைத் திறப்பது ஏற்புடையதல்ல என் பதை எந்த முட்டாளும் புரிந்து கொள்வார் என்றும் சிறு குழந்தை கூட அதைச் சொல்லும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தினக்குரல்)
Reviewed by Editor
on
September 20, 2021
Rating:
