அதிபர், ஆசிரியர்களால் தமது நியாயபூர்வமான சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும் மக்கள் மயப்படுத்தும் செயற்பாட்டுக்காகவும் இன்று (20) திங்கட்கிழமை, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் அகில இலங்கை ஜம்மித்துல் உலமா சபை அக்கரைப்பற்று கிளையின் செயலாளர் அஷ்ஷேக் எம்.ஐ.எம்.ஹபீப் (றகுமானி) அவர்களைச் சந்தித்து அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.
இதன் போது அம்பாரை மாவட்ட இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் இணைப்பாளர் எம்.எஸ்.சத்தார் (ஆசிரியர் ,அக்-அல் ஹம்றா தேசிய பாடசாலை) செயற்பாட்டாளர்களான அஷ்ஷேக் ஏ.செய்னுத்தீன் (ஆசிரியர், அஸ்-ஸிறாஜ் தேசிய பாடசலை), எம்.ஐ.எச்.எம்.இம்றான் (ஆசிரியர், அக்- மின்ஹாஜ் தேசிய பாடசாலை) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
