தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளையிலயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது , அதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.
நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
September 23, 2021
Rating:
