இலங்கை நிருவாக சேவையில் 2019.03.05இல் இணைந்து கொண்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரி பி.பிரணவரூபன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக இன்று (23) வியாழக்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய என்.நவனீதராஜா லாகுகல பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தையடுத்தே நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக பி.பிரணவரூபன் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உட்பட பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 23, 2021
Rating:

