அவுஸ்திரேலியாவில் மூன்று தடவைகள் தாக்கிய பூகம்பம்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவின் வடகிழக்கிலுள்ள மான்ஸ்பீல்டை மூன்று தடவைகள் பூகம்பங்கள் இன்று (22) தாக்கியுள்ளன.

கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்பைன் தேசிய பூங்கா பகுதியில் முதலாவது பூகம்பம் உணரப்பட்டது 5.8 அளவில் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய குடியேற்றத்தின் பின்னர் கிழக்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய கடுமையாக பூகம்பம் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது பூகம்பம் தாக்கி 15 நிமிடத்தின் இரண்டாவது பூகம்பம் 4.00 அளவிலும், அதன் பின்னர் மூன்றாவது பூகம்பமும் 6.00 அளவிலும் தாக்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனால் வீதிகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








அவுஸ்திரேலியாவில் மூன்று தடவைகள் தாக்கிய பூகம்பம் அவுஸ்திரேலியாவில் மூன்று தடவைகள் தாக்கிய  பூகம்பம் Reviewed by Editor on September 22, 2021 Rating: 5