அக்கரைப்பற்று இளமானி பட்டப்பயிலுனர் சங்கத்தின், சர்வதேச சமாதான தின செய்தி

ஒவ்வொரு வருடமும் சர்வதேச சமாதான தினமானது உலகளாவிய ரீதியில் செப்டம்பர் மாதம் 21ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 

இவ்வருடம் ஐக்கியநாடுகள் சபையானது, தற்போதைய COVID நெருக்கடி காலகட்டத்தில் ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன், மக்கள் அனைவரும் இந்த கொடிய தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளுடன் மக்கள் அனைவரும் சாந்தி, சமாதானம், சமத்துவம், நீதி மற்றும் ஆரோக்கியமான அம்சங்களுடன் வாழ அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

உண்மையில் தற்போதைய COVID 19 நிலையானது சாதி, மத, பால், வயது, செல்வாக்கு வேறுபாடுகளை கடந்து, அனைவரும் ஒரே இனத்தவர்கள் எனும் உண்மையை எமக்கு உணரச்செய்துள்ளது. 

ஆகவே, இந்த நாட்டில் மக்கள் அனைவரும் குரோதம், இனவாதம், மதவாதம், பால்வேற்றுமைகள் மற்றும் அடக்குமுறைகளை களைந்து ஒருவருக்கொருவர், ஒரே மண்பிறந்தவர்கள் எனும் அடிப்படையில் அன்பு, கருணை, பரிவு , சகோதரத்துவம் நட்பினை மாத்திரம் பகிர்ந்து இன்புற்று வாழ அக்கரைப்பற்று இளமானி பட்டப்பயிலுனர் சங்கம் வாழ்த்துகிறது என்று அச்சங்கம் வெளியிட்டுள்ள சமாதான தின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அக்கரைப்பற்று இளமானி பட்டப்பயிலுனர் சங்கத்தின், சர்வதேச சமாதான தின செய்தி அக்கரைப்பற்று இளமானி பட்டப்பயிலுனர் சங்கத்தின், சர்வதேச சமாதான தின செய்தி Reviewed by Editor on September 21, 2021 Rating: 5