பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமிக்கும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் இடையில் நேற்று (16) முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த விஜயத்தில் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டுள்ளனர்.
பாண்டிச்சேரி முதலமைச்சருடனான சந்திப்பில் வியாழேந்திரன் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பேச்சு வார்த்தை இடம்பெற்றது.
பாண்டிச்சேரி மாநில அரசுக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு வரவுள்ள கப்பல் போக்குவரத்தினை விரைவுபடுத்துமாறும், வடக்குடன், கிழக்கினையும் மையப்படுத்தி அத்தகைய போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துமாறும் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சர் என். ரங்கசாமி, போக்குவரத்து அமைச்சர் பிரியங்கா, சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் தனது வேண்டுகோளுக்கு அமைய சாதகமான பதிலை தந்துள்ளனர் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை - இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நன்றி - மலைநாடு
