கொவிட் தொற்றிலிருந்து சுகமடைந்தவர்கள் அவதானம்

கொவிட் தொற்றிலிருந்து சுகமடைந்தவர்கள் மத்தியில் அதற்கு பிந்திய பல்வேறு‌ நீண்ட தொடர் நோய்கள் Long COVID Syndrome  ஏற்படுவது பலரில் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

கோவிட் -19 தொற்றுக்குப் பிறகு  ஏற்படக்கூடிய நீண்ட கோவிட் அறிகுறிகளாககீழ் வரும் பல அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றோ அல்லது பலதோ ஏற்படலாம்.

அதிக சோர்வு (சோர்வு) , மூச்சு திணறல், மார்பு வலி அல்லது நெஞ்சிறுக்கம், நினைவு மறதி மற்றும் கவனச்சிதறல்கள்,தூங்குவதில் சிரமம் (தூக்கமின்மை), படபடப்பு, தலைசுற்றல், ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, மூட்டு வலி, மன அழுத்தம் மற்றும் பதட்டம், காதுவலி ,உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பசியின்மை, அதிக உடல் வெப்பநிலை, இருமல், தலைவலி, தொண்டை புண், வாசனை அல்லது சுவை உணர்வு இல்லாமை, தோல் தடிப்புகள் போன்றன பெருமாபாலும் ஏற்படுகின்றன. இவைகள் சில வேளைகளில் , ஒரு சில மாதங்கள் வரை நீடிக்கவும் கூடும்.

இவற்றில் சடுதியாக இறப்பை ஏற்படுத்தக்கூடிய Myocarditis எனும் இருதய தசை அழற்சி மிகவும் பாரதூரமான ஒன்றாகும். இதுவே கொவிட் தொற்றிலிருந்து சுகமடைந்து வீடு திரும்பிய பலர் சடுதியாக இறந்து போவதற்கான காரணமாக ஆய்வுகளில் அறியப்பட்டிருக்கிறது.

ஆகவே, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஓரிரு வாரங்கள் வீட்டில் போதுமான அளவு ஓய்வு எடுப்பது கட்டாயம். கொவிட் தொற்றுக்கு பிந்திய ஓரிரு வாரங்களுக்கு அதிக வேலைகள் செய்யாமல், அதிக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது விருப்பத்தக்கது. இது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதை மறக்க வேண்டாம். ஓய்வாக இருப்பது ஹார்ட்டிற்கு அதிக வேலை கொடுப்பதை தவிர்க்க உதவும்.  மயோகார்டைடிஸ் ஏற்பட்டாலும் இருதயத்தை வீக் ஆகிவிடமால் பாதுகாக்கும்.

எனவே,  "எனக்கு கொவிட் வந்து இப்போது சுகமடைந்து விட்டது" அல்லது 'சும்மா காய்ச்சல் வந்து சுகமடைந்து விட்டது' , "நான் இப்போது நன்றாக இருக்கிறேன்; எனக்கு ஒன்றும் இல்லை!" என்ற எண்ணத்தில் உடனடியாக வேர்க் அவுட் செய்வதை, ஜிம் போவதை, கடின உடல் உழைப்பு மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஓரிரு வாரங்கள் ஓய்வின் பின்னர் இவைகளை மெது மெதுவாக ஆரம்பிப்பது புத்திசாலித்தனமானது.


டாக்டர்.பீ.எம்.அர்ஷாத் அஹமட் (MBBS MD PAED)
குழந்தை நல வைத்திய நிபுணர்
ஆதார வைத்தியசாலை
அக்கரைப்பற்று.







கொவிட் தொற்றிலிருந்து சுகமடைந்தவர்கள் அவதானம் கொவிட் தொற்றிலிருந்து  சுகமடைந்தவர்கள் அவதானம் Reviewed by Editor on September 07, 2021 Rating: 5