மாவட்ட ஆயுர்வேத வைத்திய சாலைக்கு றிஸ்லி முஸ்தபா விஜயம்

(எம்.என்.எம். அப்ராஸ்)

கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்திய சாலைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை   உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா அவர்கள்  நேற்று (19) விஜயம் செய்து வைத்தியசாலையின்  நிலை தொடர்பில் கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  எம்.வை.இஸ்ஹாக் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

குறிப்பாக  நோயாளர்களின் நலன் கருதி வைத்தியசாலை அத்தியட்சகரினால் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு அமைய  வைத்திசாலைக்கு ஜெனரேட்டர் (generator) வசதி ரிஸ்லி முஸ்தாவினால் விரைவில்  வழங்கப்படவுள்ளது.

நோயாளர்கள் சிகிச்சை பெற தங்குவதற்கான கட்டில் வசதியை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக இளைஞர் விவகார விளையாட்டு துறை அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர்  நாமல் ராஜபக்சவின் கவனத்திற்க்கு கொண்டு சென்று தேவையான  கட்டில்களை  பெற நடவடிக்கை எடுப்பதாகவும், அத்துடன் மேலும் வைத்தியசாலைக்கு தேவையான கட்டிட வசதி ,  புனர்நிர்மாண வேலை  தொடர்பில்அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் டப்ளியு . டீ . வீரசங்கவின் கவனத்திற்க்கு கொண்டு சென்று இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக ரிஸ்லி முஸ்தபா உறுதியளித்தார்.

கொரோனா தொற்று நிலையில் மக்களுக்கு சுகாதாரத் துறையினர் பொது மக்களுக்கு அர்பணிப்புடன் வைத்திய சேவை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் எமது பிரதேசத்தில் கல்முனை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் ஊழியர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி  வருவதையிட்டு வைத்தியசாலை அத்தியட்சகர்எம்.வை.இஸ்ஹாக் தலைமையிலான வைத்தியசாலை ஊழியர்களுக்கு நன்றியினை ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார் .

வைத்தியசாலைக்கு தன்னால் முடிந்த உதவிகளை பெற்றுக் கொடுத்து மேலும் வைத்தியசாலையை முன்னேற்ற தனது பங்களிப்பை வழங்குவேன் என மேலும் தெரிவித்தார்.

இதில் றிஸ்லி முஸ்தபாவின் செயலாளர் ஏ.எச். அல் – ஜவாஹிர் கலந்து கொண்டார்.







மாவட்ட ஆயுர்வேத வைத்திய சாலைக்கு றிஸ்லி முஸ்தபா விஜயம் மாவட்ட ஆயுர்வேத வைத்திய சாலைக்கு  றிஸ்லி முஸ்தபா விஜயம் Reviewed by Editor on September 20, 2021 Rating: 5