(றிஸ்வான் சாலிஹு)
பசறை தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டடம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, தற்பொழுது உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் புதிய தொழிற்பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை தற்போதைய நிலையில் பசறை தொழிற்பயிற்சி நிலையத்தைத் தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் பசறை பிரதேச சபை தலைவர் ஆர்.எம். ஞானதிலக, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, பசறை பிரதேச செயலாளர் என்.ஜே.டி. அனுராதா உட்படத் தொழிற்பயிற்சி ஆணையத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 30, 2021
Rating:

