(எம்.என்.எம்.அப்ராஸ்)
சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இறுதி நாள் வேலைத்திட்ட நிகழ்வுகள் இன்று ( 30) வியாழக்கிழமை கல்முனை சமுர்த்தி வங்கி, வலயப் பிரிவில் இடம்பெற்றது.
இதன் போது பயன்தரும் மரக்கன்றுகள் நடல், வீடமைப்பு வேலைத்திட்ட ஆரம்பம், சுகாதார மேன்பாட்டு வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைத்தல் என்பன இடம்பெற்றது.
கல்முனைகுடி சமுர்த்தி வங்கி, வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம். சாலிஹ், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் எஸ். எல். அஸீஸ், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத், சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம்.எம். முஜீப் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 30, 2021
Rating:


