Palamunai Health Forum மற்றும் பாலமுனை ஜம்மியத்துல் உலமா ஆகிய அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டின் மூலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தியாக்கும் வகையில் எதிர்வரும் (19) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரியில் இரத்ததான முகாம் ஏற்பாடாகியுள்ளது.
எனவே உயிர் காக்கும் இந்த உயர்ந்த பணியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இளைஞர் யுவதிகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைக்கின்றார்கள்.
மேலும், இது கொரோனா காலப்பகுதி ஆதலால் சுகாதார நடைமுறைகளை பேணும் வகையில் இரத்ததானம் வழங்க விரும்புபவர்களிடம் முற்பதிவை மேற்கொண்டு ஒவ்வொருவருக்கும் குறித்த நேரத்தினை கொடுத்து அழைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இதன் படி இரத்ததானம் வழங்க விரும்பியவர்கள் உடனடியாக 0768505980 எனும் இலக்கத்திற்கு வட்சப் மூலம் உங்கள் பெயர், வயது, தொலைபேசி இலக்கம் என்பவற்றை அனுப்புவதன் மூலம் உங்கள் முற்பதிவினை மேற்கொள்ளுவதோடு, பின்னர் இரத்ததானத்திற்கு முந்திய தினத்தில் இந்த அமைப்பினை சேர்ந்தோர் உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான நேரத்தை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
September 10, 2021
Rating:
