வாழ்வாதாரம் முடக்கப்பட்டவர்களுக்கு கல்முனையன்ஸ் போரத்தினால் நிதியுதவி

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கொரோனா பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில்  அமுல்படுத்தப்பட்டிருக்கும்  முடக்க நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கல்முனையன்ஸ் போரம் உதவிக்கரம் நீட்டிக்கொண்டு வருகிறது. 

இந் நிலையில் வாழ்வாதாரம் பாதிப்படைந்த குடும்பங்களுக்கான நான்காம் கட்டமாக நிவாரண விநியோகம் நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.  

கல்முனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 225 பயனாளிக்குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா (2,000 )படி நிவாரண நிதி கடந்த இரு நாட்களில் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமையன்று பயனாளி குடும்பங்களுக்கு (06,07)  வழங்கிவைக்கப்பட்டிருக்கிறது.

கொவிட் தொற்று நிலையின் போது கல்முனையன்ஸ் போரமானது இதுவரையிலும் நான்கு கட்டங்களில் சுமார் 2.25 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரண விநியோகத்தினை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


வாழ்வாதாரம் முடக்கப்பட்டவர்களுக்கு கல்முனையன்ஸ் போரத்தினால் நிதியுதவி வாழ்வாதாரம் முடக்கப்பட்டவர்களுக்கு கல்முனையன்ஸ் போரத்தினால் நிதியுதவி Reviewed by Editor on September 08, 2021 Rating: 5