கொரோனாவை விடவும், அழியப் போகும் விவசாயிகள் பற்றி பேசாமலிருக்கும் நமது எம்.பிக்களே கொடியவர்கள்

கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலும் வேளான்மை விவசாயம் என்பது மிகப்பிரதானமான வருமான வழியாக அமைந்துள்ளது. அதற்கு பிறகுதான் ஏனையவை எல்லாம். இந்த பிரதான வருமானத்தில் இன்றைய அரசினால் கைவைக்கப்பட்டுள்ளது என்று கிழக்கு மாகாண முன்னாள் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல தசாப்தங்களாக இரசாயன பயளை வகைகள் மற்றும் கிருமிநாசினிகளுக்கு பழக்கப்பட்ட விவசாயிகளும், நிலமும், விதைகளும் திடிரென சேதன பயளைக்கு மாற வேண்டும் என்பது பெரும் சோதனையாக அமைந்துள்ளது. 

சாதாரணமான அங்கர் பால் பாவனையையே மாற்ற முடியாமல்  அங்கர் தேடி அலையும் அனுபவமே இதற்கு மிகச்சிறந்த உதாரணம். தன் நுகர்வுக்கோலத்தை மாற்றுவதற்கு மனிதனுக்கே இவ்வளவு சிரமம் என்றால் முளை திறனும்,வளர் திறனும், விளை திறன் என வேறுபட்ட கோலங்களையுடைய ஒரு படிமுறையை இலகுவாக மாற்ற முடியுமா? அதுவும் பல தசாப்தங்கள் பழக்கப்பட்ட ஒரு முறையை உடன் மாற்ற முடியுமா?

ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் கால்வாசியை அல்லது அரைவாசியை சேதன பயளையில் விவசாயம் செய்யவும் - மிகுதியை இரசாயன பயளையை பயன்படுத்தி விவசாயம் செய்யவும் அறிவுறுத்தி இருந்தாலும் - அது சற்று ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால், மொத்தமாக சேதன பயளையை பயன்படுத்தும் போது - மொத்த விளைச்சலும் பாதிக்கப்பட்டு - ஒரு சில வருடங்களில் வேளான்மை விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

சில பிரதேசங்களில் சேதன பயளையை பயன்படுத்தி வேளாண்மை விவசாயம் செய்வதிலுள்ள சிக்கல்கள் மற்றும் வருமான நஷ்டம் என்பவற்றை கருத்திற்கொண்டு தாம் இப்போகம் விவசாயம் செய்வதில்லை என விவசாய சங்கங்கள் கூறியதற்கு அரச படைகளை பயன்படுத்தி உங்கள் நிலத்தில் விவசாயம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனைப் பற்றி பேச வேண்டிய முஸ்லிம் எம்.பிக்களுக்கு இது பற்றி எந்த அக்கறையுமே இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் தமக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை போல் இருக்கிறார்கள். ஏலவே அரசாங்கத்தோடு இணைந்துள்ள எம்.பிக்களும், 20க்கு கையுயர்த்தி அரசாங்கத்தோடு இணைந்துள்ள ஏனைய கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்களும் இதனை பற்றி வாயே திறக்காமல் இருக்கிறார்கள்.

கோடான கோடி வருமானத்தைத் தரும் வேளான்மை விவசாயத்தை அழிய விட்டுவிட்டு அழிந்து கிடக்கும் அரசாங்கத்திடமிருந்து தென்னங்கன்று கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது எம்.பிக்கள். இதனையும் நியாயப்படுத்தும் சில சில்லறைகளை காணும் போது சிரிப்புத்தான் வருகின்றது. 

கொரோனாவை விடவும் வேளாண்மை விவசாயத்தை பற்றி பேசாமலிருக்கும் நமது எம்.பிக்களே கொடியவர்கள். அழியப்போகும் இலட்சக்கணக்கான விவசாயிகளையும் விவசாயத்தில் தங்கியிருப்பவர்களையும் பற்றி பேசாத இந்த எம்.பிக்கள் ஆபத்தான சமூக வைரஸ்கள் என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் இந்த விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கரிசனை எடுத்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் இந்த அறிக்கையில் சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




கொரோனாவை விடவும், அழியப் போகும் விவசாயிகள் பற்றி பேசாமலிருக்கும் நமது எம்.பிக்களே கொடியவர்கள் கொரோனாவை விடவும், அழியப் போகும் விவசாயிகள் பற்றி பேசாமலிருக்கும் நமது எம்.பிக்களே கொடியவர்கள் Reviewed by Editor on September 05, 2021 Rating: 5