பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் சீனி வழங்கல்

(றிஸ்வான் சாலிஹு)

கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் சந்தையில் நிலவிய சீனி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் (MPCS) ஊடாக கட்டுப்பாட்டு விலையில் சீனியினை விநியோகம் செய்யும் தேசிய வேலைத் திட்டம்  வெள்ளிக்கிழமை முதல் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில், மட்டுப்படுத்தப்பட்ட அக்கரைப்பற்று மத்திய பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று பதுர்  ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து அப்பகுதி மக்களுக்கு சிவப்பு சீனி 130 ரூபாவுக்கு வழங்கும் நிகழ்வு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் எம்.பீ.ஏ.ஹமீட் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மட்டுப்படுத்தப்பட்ட அக்கரைப்பற்று மத்திய பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ்.எல்.அப்துல் ஹஸன், இயக்குனர் சபை உறுப்பினர்களான என்.ரீ.அஸ்மத், ஐ.எல்.வஹாப், வை.ஸஹீர், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் கெளரவ ஏ.சீ.எம்.நெளபர் மற்றும் பதுர் ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் ஏ.எல்.அனஸ், சமூக சேவையாளர் முஹம்மட் ஜும்றத்  ஆகியோர் கலந்து கொண்டு நியாயமான கட்டுப்பாட்டு விலையில் சீனியை மக்களுக்கு வழங்கி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.











பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் சீனி வழங்கல் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் சீனி வழங்கல் Reviewed by Editor on September 05, 2021 Rating: 5