அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப் அவர்களுக்கும் பொத்துவில் கொட்டுக்கள் பிரதேச மீனவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பொத்துவில் கொட்டுகள் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நட்பு ரீதியாக உரையாடி அவர்களின் சமகாலப் பிரச்சனைகள் மற்றும் அத்தியாவசிய கோரிக்கைகள் என்பனவற்றை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் உறுதியளித்தார்.
குறித்த மீனவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து பொத்துவில் ஹிதாயா புரத்தில் அமைந்துள்ள தவிசாளர் பூங்காவுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு நடைபெறவுள்ள அபிவிருத்திகள் பற்றியும் பிரதேச மக்களுடன் உரையாடினார்.
Reviewed by Editor
on
September 12, 2021
Rating:


