கெரவலபிட்டிய மின்நிலையம் அமெரிக்காவுக்கு கள்ளத்தனமாக விற்கப்பட்டது - அநுர

 (ஊடக சந்திப்பு – மக்கள் விடுதலை முன்னணி – 2021.09.19

பத்தரமுல்ல, மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில்)
எமது நாட்டின் மிகப்பெரிய தேசிய வளமான கெரவலபிட்டிய மின்நிலையத்தை விற்பதற்கான உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. நாங்கள் மிகப்பெரிய வலுச்சக்தி நுகர்வு உள்ள ஒரு நாடு அல்ல. தேசிய பாதுகாப்பின்போது வலுச்சக்தித்துறை மிகுந்த முக்கியத்துவம் வகிக்கின்றது. அதனால் இது அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டியது மிகமுக்கியமானதாகும். பசில் ராஜபக்ஷ எனப்படுகின்ற அமெரிக்க இரட்டைப் பிரஜை, கோட்டாபய ராஜபக்ஷ இரட்டைப் பிரஜை எமது நாட்டின் இந்த முக்கியமான வளத்தை அமெரிக்காவிற்கு கையளிப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.
கெரவலபிட்டிய மின்நிலையம் தற்போது 300 மெகாவொற்றினை உற்பத்தி செய்கின்றது. அதில் மேலும் 300 மெகாவொற் சேர்க்கப்பட உள்ளது. 2025 இல் இதனை 1,000 மெகாவொற்றாக மாற்றுவதற்கான திட்டமொன்று இருக்கின்றது. அது மிகப்பெரிய வலுச்சக்தி நிலையமாக அமைய உள்ளது. அது அரச கம்பெனியொன்றுக்கு உரிமையுள்ள மின்நிலையமாகும். தற்போது அது டீசல் மூலமாக மின்சாரத்தை உற்பத்திசெய்த போதிலும் அதனை டீசலில் இருந்து கேஸ் வரை மாற்றக்கூடிய தொழில்நுட்பம் நிலவுகின்றது. ஆனால் எமக்கு இன்னமும் கேஸ் களஞ்சியமொன்று, குழாய்த் தொகுதியொன்று, திரவ கேஸினை வாயுவாக மாற்றுகின்ற பொறியொன்று இன்மையால் டீசலில் இருந்து மின்சாரம் பிறப்பிக்கப்படுகின்றது. எனவே கேஸில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்ய அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளுக்காக சர்வதேச கேட்புவிலை பெற்றோலியத்திற்குப் பொறுப்பான அமைச்சினால் கோரப்பட்டது. கடந்த பெப்ரவரி 18 ஆந் திகதி இது சம்பந்தமாக வெகுசன ஊடகங்களில் அறிவித்தல்கள் பிரசுரிக்கப்பட்டன. இதற்கிணங்க மிதக்கின்ற கேஸ் களஞ்சியத் தொகுதி மற்றும் குழாய்த் தொகுதிக்கான தனித்தனியான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டிருந்தன. அதன் விண்ணப்பப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக ரூ. 2 இலட்சம் வைப்புத் தொகை பெறப்பட்டது. ஜூலை 18 ஆந் திகதிக்கு முன்னர் கேட்புவிலையை சமர்ப்பிக்கவேண்டியதாக இருந்தது. எனினும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தக் கேள்வி கோரலுக்காக கேட்புவிலை சமர்ப்பித்திராத நிவ் போட்ரற் எனர்ஜி எனப்படுகின்ற அமெரிக்க கம்பெனிக்கு கெரவலபிட்டிய மின்நிலையத்தின் 40%, கேஸ் களஞ்சியத் தொகுதி மற்றும் குழாய்த் தொகுதியை வழங்குவதற்காக கெபினற் பத்திரமொன்று அங்கீகரித்துக்கொண்டார்.
இது எவ்விதத்திலும் பரிசுத்தமான கொடுக்கல்வாங்கல் அல்ல. அந்த அமெரிக்க கம்பெனிக்குத் தேவையென்றால் டெண்டருக்காக முன்வந்திருக்கலாம். ஆனால் அதற்காக விண்ணப்பித்திராத கம்பெனியொன்றுக்கு அமெரிக்க பிரசை பசில் ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது. பசிலுக்கு கறுப்பு வரலாறுதான் இருக்கின்றது. அவர் அமைச்சராகியபோதே சமூகத்தில் இந்த உரையாடல் தோன்றியது. இந்தக் கம்பெனிக்கு 5 வருடங்கள் கழியும்வரை கேஸ் கொள்வனவும் டெண்டர் இன்றியே வழங்கப்பட்டுள்ளது. அதைப்போலவே கெரவலபிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற எந்தவொரு மின்நிலையத்திற்கும் கேஸ் வழங்குவதற்கான அதிகாரமும் இந்தக் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்க்கைச் சுமையால் நெரிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு நாடு மீது சுமத்தப்பட்டுள்ள பிரமாண்டமான கடன் சுமையும் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. கடன் ஓர் அநியாயமாக அமையாவிட்டாலும் இலங்கை பெற்ற கடன்களிலிருந்து அவசியமான சொத்துக்கள் கட்டிவளர்க்கப்படவில்லை. ஊழல் – மோசடி என்ற வகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் கைகளைச் சென்றடைந்துள்ளமையே அதன் பொருளாகும். உண்மையிலேயே அரசாங்கம் டெண்டர் கோராமலேயே இந்தக் கம்பெனிக்கு ஏன் கெரவலபிட்டியவை தாரைவார்த்துக் கொடுக்கின்றது என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
கெரவலபட்டிய மின்நிலையத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் 2021.09.06 ஆந் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பொதுவாக அமைச்சரவைப் பத்திரமொன்று கூட்டம் நடைபெற மூன்று நாட்களுக்கு முன்னராக அமைச்சரின் கைக்கு வந்தாலும் இந்த அமைச்சரவைப் பத்திரம் அவ்விதமாக சமர்ப்பிக்கப்படவில்லை. மேலதிக பத்திரமொன்றாக கூட்டத்தின்போதே சமர்ப்பிக்கப்பட்டது. ஒருசில அமைச்சர்களின் எதிர்ப்பின் மத்தியில் அந்தத் தருணத்திலேயே அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டது. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அங்கீகாரத்தின்பொருட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதாக அங்கு கூறப்பட்டுள்ளது. எனினும் அதில் எந்தவிதமாக அர்த்தமும் கிடையாது. பொதுவாக உடன்படிக்கை தயாரிக்கப்பட்டு அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் கைச்சாத்திடுவதே இடம்பெறுகின்றது. ஆனால் இங்கு இடம்பெற்றது இதன் மறுபக்கமாகும். அதற்கிணங்க கடந்த 17 ஆந் திகதி நள்ளிரவு 12.06 இற்கு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதற்காக கம்பெனியின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதன் பின்னரே அமெரிக்கா சென்றார்.
இந்த ஆட்சியாளர்கள் விற்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை மீண்டும் கையேற்பதாகக் கூறியே அதிகாரத்திற்கு வந்தார்கள். அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லவென்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரிச்சலுகைளை வழங்குகின்ற சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்காக ராஜபக்ஷமார்களும் அவர்களின் அவர்களின் அன்பர்களும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை. அவர்கள் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு கூறிய எதையுமே செய்யவில்லை. அவர்கள் படிப்பது திருவாசகம் – இடிப்பது சிவன்கோலில் போன்றவர்கள். இன்று எமது நாட்டின் வலுச்சக்தி துறையின் உரிமை எவருக்கு உண்டு என்பதன்பேரில் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. கோட்டாபய, மகிந்த, பசில், சமல், நாமல் குடும்ப கெபினற்றினால் வலுச்சக்தி துறை அமெரிக்காவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. கொவிட் நிலைமைக்குள் மக்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத சூழ்நிலைக்குள் இந்தக் கொடுக்கல்வாங்கல் இடம்பெற்றமையே முக்கியமான விடயமாகும்.
விவசாயம் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான துறையாகவும் மரபுரிமையாகவும் அமைகின்றது. இலங்கை நாகரிகத்தின் முதல்நிலப்பரப்பு விவசாயத்தை சார்ந்ததாகவே அமைகின்றது. அதன் பெறுபேறாக எங்களுக்கு முன்னேற்றமடைந்த நீர்ப்பாசன நாகரிகமொன்று மரபுரிமையாயிற்று. உழைப்புப் படையணியில் 27% விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். தேசிய உற்பத்தியில் 7% ஐ விவசாயம் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஏற்றுமதியில் 25% விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கைத்தொழிலாகும். இந்த நிலைமைக்குள் விவசாயம் சம்பந்தமாக ஆழமாக சிந்தித்துப் பார்த்தே தீர்மானம் மேற்கொள்ளவேண்டும். ஆனால் அரசாங்கமும் அமைச்சர்களும் மூளையால் சிந்திக்காமல் உடற்பலத்தாலேயே தீர்மானம் மேற்கொள்கிறார்கள். அவர்கள் ஒருதடவை அரிசியாலை மாபியாவை தகர்ப்பதாக கூறினார்கள். ஆனால் சுற்றிவளைப்பின் பின்னர் அவர்கள் 08 இலட்சம் கிலோ அரிசியை மாத்திரமே கொண்டுவந்தார்கள். நாட்டின் நாளாந்த அரிசி நுகர்வு ஏறக்குறைய 60 இலட்சம் வரையானதாக அமைகையில் இது கேலிக்கூத்தாகும். அதைப்போலவே அவர்கள் நெல் கொள்வனவின்போது உத்தரவாத விலைக்குப் பதிலாக கட்டுப்பாட்டு விலையை விதித்தார்கள். உத்தரவாத விலையை நிர்ணயித்திருந்தால் அதனை குறைந்தபட்ச விலையாகப் பேணிவந்து கமக்காரர்களால் அதிக விலைக்கு நெல்லை விற்பனைசெய்ய இயலுமானதாக இருந்தது. ஆனால் இதன் மூலமாக கூறப்படுவது ரூ. 50 விட அதிகமாக கொள்வனவுசெய்ய இயலாமையாகும். இப்போது கமக்கார்களின் நெல்லை வியாபாரிகளுக்கு விற்றுத் தீர்த்த பின்னர் ஒரு கிலோ நெல் ரூ. 55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கமக்காரருக்கு கிடைக்கவேண்டிய விலை இல்லாமல் போகின்றது.
நெற் செய்கையில் விதைகளுடன் களைகளுடன் தொடர்புடைய விதைகளும் நுழைகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக களை கொல்லிகள் பாவிக்கப்பட்டு வந்தன. மரபுரீதியான பயிர்ச்செய்கையின்போது வயலுக்கு ஏறக்குறைய ஒரு மாதம் நீர்பாய்ச்சப்படுகின்றது. நீர் கட்டிவிட்டதும் களைகள் அழுகிவிடுகின்றன. ஆனால் மகாவலியில் இரண்டு வாரங்களுக்கே நீர் வழங்கப்படுகன்றது. அதனால் மரபுரீதியான களை கொல்லி முறைகளை அவர்களால் பாவிக்க இயலாது. அவர்களுக்கு இத்தடவை களை பிடுங்குவதற்காக மேலதிக செலவுகளை எற்க நேரிட்டது. பெரும்பாலானோருக்கு ஈடுபடுத்திய பணத்தையும் விளைச்சலையும் பெற்றுக்கொள்ள இயலாமல் போயிற்று.
இரசாயன உள்ளீடுகள் இல்லாமல் போனமையால் தேயிலைக் கைத்தொழிலும் சீரழிந்துள்ளது. தேயிலை சிறுபற்றுநில உரிமையாளர்கள் பலரது பிரதான சீவனோபாயமாக அமைவது தேயிலைச் செய்கையாகும். தேயிலைச் செய்கை போன்ற சரிவான நிலத்தில் சேதனப் பசளையை இடுதல் பற்றி விசாரித்தறியாமல் இரசாயன பசளைப் பாவனையை நிறுத்தி சேதனப் பசளையின்பால் பிரவேசிக்க வேண்டுமெனக் கூறினார்கள். அதைப்போலவே சோளச்செய்கை சவாலை எதிர்நோக்கி உள்ளது. இந்த விதைகளுக்கு இரசாயனப் பசளை அவசியமானதாகும். பொதுவாக வருடமொன்றுக்கு 1,500 மெட்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்படுகின்றது. ஆனால் செய்கை தொடர்பான நிச்சமற்றதன்மை காரணமாக இத்தடவை 600 மெட்றிக்தொன் விதைகளே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கிடைக்கின்ற தகவல்களுக்கிணங்க அதிலும் 150 மெட்றிக் தொன்களே விற்பனையாகி உள்ளது. சோளப் பயிர்ச்செய்கை சம்பந்தமாக கமக்காரர் மத்தியில் நிலவுகின்ற நிச்சயமற்றதன்மையே இதன்மூலமாக புலனாகின்றது. இது உணவு உற்பத்திமீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. நாட்டுக்குள்ளே சோளச் செய்கை நின்றுவிட்டால் இறக்குமதிசெய்ய டொலர்கூட இல்லாதநிலையில் இது மிகவும் பாரதூரமானதாகும். இதற்கிணங்க விவசாயம் பிரமாண்டமான ஆபத்திலேயே உள்ளது.
இறுதியில் அரசாங்கம் சேதனப் பசளை உறபத்தி செய்கின்ற 2 இலட்சம் கமக்காரர்களை கட்டியெழுப்புவதாக கூறியது. கமக்காரரொருவருக்கு ரூ.210,000 வழங்குவதாக கூறினார்கள். வெகுசன ஊடகங்களில் அறிவித்தல்களை பிரச்சாரம் செய்தார்கள். அதன் பின்னர் கமக்காரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாகக் கூறினார்கள். அவர்களுக்கு ரூ.150,000 வீதம் வழங்குவதாக கூறினார்கள். பின்னர் ஒரு இலட்சம் கமக்காரர்கள் 10,000 ஆக குறைக்கப்பட்டார்கள். அந்த கமக்காரர்களுக்கு ரூ.110,000 வீதம் கொடுப்பதாக கூறினார்கள். இறுதியில் கமநல சேவைகள் நிலையமொன்றுக்கு ஒரு கமக்காரருக்கு வழங்குவதாக கூறினார்கள். நாட்டில் இருப்பதோ ஏறக்குறைய 560 கமநல சேவை நிலையங்களாகும். இரண்டு இலட்சம் கமக்காரர்களில் தொடங்கி அவ்வாறுதான் 560 வரை குறைவடைந்தது.
இப்போது சேதனப்பசளையை உற்பத்திசெய்துகொள்ள முடியாதென்பதால் இறக்குமதி செய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக கூறினார்கள். எமது நாட்டு தாவர தொற்றுநோய்த்தடை சட்டத்தின்படி சேதனப் பசளையை இறக்குமதிசெய்ய முடியாது. அதற்கான ஆராய்ச்சிகளுக்கு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் வரை கழியும். அதனால் அரசாங்கம் இறக்கமதி செய்வதற்கான தனிவேறான கொள்கையொன்றை வகுக்கும்மென கூறினார்கள். உண்மையிலேயே அரசாங்கம் தேர்தல் காலத்தில் இரசாயனப் பசளையை இலவசமாக வழங்குவதாகவே கூறியது. கடந்த ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் இரசாயனப் பசளை இறக்குமதியை நிறுத்தினார்கள். இதன் தாக்கம் பற்றி எந்தவிதமான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. அது கடந்த சிறுபோகத்தில் தாக்கமேற்படுத்தாமைக்கான காரணம் அத்தருணமாகும் வேளையில் பெரும்பாலான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையாகும். ஆனால் தற்போது பெரும்போகம் ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றது. தமது கமத்தொழில் தொடர்பில் கமக்காரர்கள் நிர்க்கதி நிலையுற்றிருக்கிறார்கள். அவர்களின் விளைச்சல் தொடர்பில் அவர்களிடம் நிச்சயமற்றதன்மையே நிலவுகின்றது. கமக்காரர்களுக்கு கமத்தொழில்மீது வெறுப்பு ஏற்படச் செய்வித்து மேற்படி கமநிலங்களை அரசாங்கத்தின் அன்பர்கள் பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்றும் அதன் மறைவில் இருக்கக்கூடும். 2021.08.05 ஆந் திகதி மகிந்தானந்த கமத்தொழில் அமைச்சர் சேதனப் பசளை இறக்குமதிக்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்தார். சேதனப் பசளை இறக்குமதி மூலமாக பிற நாடுகளின் நுண்ணங்கிகள் இந்நாட்டுக்ககுள் பிரவேசிக்க இயலுமென ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆனால் அரசாங்கம் சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டது.
ஆக்கிரமிப்புத்தன்மைகொண்ட தாவரங்கள், நுண்ணங்கிகள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக தாவர தொற்றுநோய்த்தடை சட்டம் அமுலாக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படவுள்ள பசளை மாதிரிகளில் நுண்ணங்கிகள் உள்ளனவென பதிவாகின்றது. இந்த மாதிரி நோய்நுண்மநீக்கம் செய்யப்படவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. தற்போது அமைச்சர் அந்த மாதிரி முறைசாராததென சீ.ஐ.டி. இடம் செல்வதாக அச்சுறுத்துகிறார். சேதமேற்படுத்தக்கூடிய நுண்ணங்கிகள் இருப்பதாக கண்டுபிடித்த நிறுவனம் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டுகிறார். எப்படியாவது சீன கம்பெனிக்கு இந்த டெண்டரை வழங்கவே அரசாங்கம் எதிர்பார்க்கப்படுகின்றது. சனாதிபதி இந்த தீர்மானத்தை எடுக்கையில் மிகவும் பாரதூரமானவகையில் கருத்திற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அரசாங்கம் மூளையாலன்றி உடலாலேயே தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த நிலைமையிலேயே ஒட்டுமொத்த விவசாயமும் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளது.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்......
பார் திறக்க தீர்மானித்தவர் யார் என்பது சிக்கலானதாகும். வடிசாலைகள் அமைச்சர்களுக்கே சொந்தமானது. பார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சொந்தமானது. அவர்களின் வருமானம் பற்றி அரசாங்கம் சிந்தித்திருக்கக்கூடும். 1,500 கோடி மதுவரியை இழந்துள்ளதாக அரசாங்கம் கூறியிருந்தது.
அண்மைக்காலமாக ஒரு நாடு என்றவகையில் மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியொன்றை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம். வருமானம் 482 பில்லியன். சென்மதியான செலவு 1,678 பில்லியன். இவ்வருடத்தின் இறுதியளவில் ஏறக்குறைய 8.5 பில்லியன் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய நிலைமையிலேயே சீனாவுக்கு துறைமுகத்தின் 13 ஏக்கர்களை வழங்கப் போகிறார்கள். அரசாங்கத்திற்கு கடன்பெறவேண்டுமெனில் பொது ஆதனங்களை விற்கவேண்டியுள்ளது. இது தசைகளைக் காட்டி தீர்த்துவைக்ககூடிய சிக்கலொன்றல்ல.
மத்திய வங்கியின் நாணயச்சபை செயலாளர் அகற்றப்பட்டமை ஓர் எதிர்பார்த்த விடயமாகும். திருடனுக்கும் திருட்டுத்தனதைப் பிடிக்க உதவியவனுக்கும் ஒன்றாக அமரமுடியாது என்பதால் அகற்றப்பட்டிருக்கக்கூடும்.
அரச பொறியமைப்பிற்குள் பாரதூரமான அராஜகநிலை உருவாகி வருகின்றது. பல அரச உத்தியோகத்தர்கள் இராஜிநாமா செய்துவருகிறார்கள். அதேவேளையில் அரசாங்கம் பல தூதுவர்களை மாற்றிவருகின்றது. நிர்வாகச்சேவை உத்தியோகத்தர்களில் கணிசமான அளவினர் விரக்திநிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வாதாரம் காரணமாக பொறுமையாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நீங்க முடிந்தவர்கள் நீங்கி வருகிறார்கள்.
எண்ணெயய் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்திசெய்திருப்பின் பல மேலதிக உற்பத்திகளை நாடு பெற்றிருக்கலாம். அது ஓரளவுக்கு நடைமுறையில் இருந்த காலத்தில் நாட்டுக்கு அவசியமான பசளை, நைலோன், கிருமி நாசினிகள் உற்பத்தி செய்யப்பட்டன. கப்பல் எண்ணெய் வழங்கியதன் மூலமாக பாரிய வருமானம் பெறப்பட்டது. ஆனால் அவற்றை தனியார்மயப்படுத்தியதன் மூலமாக அரச வருமானம் அற்றுப்போயிற்று. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நேர்ந்த கதி நாட்டுக்கு ஏற்பட்ட தலைவிதி தொடர்பான மிகச்சிறந்த மாதிரியாகும்.
அரசாங்கத்தின் குழுக்களும் ஆட்களும் தத்தமது பிரச்சினைகளுக்காக முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டாலும் நாட்டுக்குப் பாதகமானவை தொடர்பில் அவர்களுக்கிடையில் முரண்பாடுகள் கிடையாது. தமது ஓ.ஐ.சீ. ஒருவரை இடமாற்றஞ்செய்து வேறு அமைச்சரொருவரின் ஓ.ஐ.சீ. ஒருவரை நியமித்துக்கொள்ளல் போன்றவற்றுக்காகவே அவர்கள் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். கெரவலபிட்டியவை விற்பனை செய்தல் போன்ற விடயங்களின்போது அவர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்.
ஊடகப் பிரிவு
மக்கள் விடுதலை முன்னணி
2021.09.19ராஜபக்ஷ குடும்ப கெபினற் கெரவலபிட்டிய மின்நிலையத்தை அமெரிக்காவுக்கு கள்ளத்தனமாக விற்றுவிட்டது…
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்க

கெரவலபிட்டிய மின்நிலையம் அமெரிக்காவுக்கு கள்ளத்தனமாக விற்கப்பட்டது - அநுர கெரவலபிட்டிய மின்நிலையம் அமெரிக்காவுக்கு கள்ளத்தனமாக விற்கப்பட்டது - அநுர Reviewed by Sifnas Hamy on September 23, 2021 Rating: 5