அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கண்டனப் பேரணி

(றிஸ்வான் சாலிஹு)

வெட்டிக்குறைத்த ரூ.7500/- கொடுப்பனவை மீள வழங்கு, வாக்குறுதி வேண்டாம், மாற்றீட்டு, தற்காலிக ஊழியர்களை இப்போதாவது நிரந்தரமாக்கு, சுகாதார சேவை வெற்றிடங்களை நிரப்பு, வார நாட்களில் பணிபுரியும் மேலதிக 08 மணி நேரத்திற்கு 01/30 ஐ வழங்கு, சுகதார சேவையை விரிவு படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் உடன் இன்று (27) திங்கட்கிழமை நண்பகல் வேளையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்றலில் எதிர்ப்பு கண்டனப் பேரணி இடம்பெற்றுள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு யூன் மாதம் தொடக்கம் வழங்கப்பட்டு வந்த கொவிட் விசேட கொடுப்பனவான 7500 ரூபாவை தற்போது இடைநிறுத்தியுள்ளனர். எனவே இந்த கொடுப்பனவு தொடர்ந்து வழங்கவேண்டும். அத்தோடு 8 கோரிக்கைகளை முன்வைத்து எமது தாய்சங்கம் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருக்கின்றனர் எனவே  எங்களது கோரிக்கைக்கு அரசு தீர்வு வழங்காவிட்டால் அடுத்தகட்டமாக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த எதிர்ப்பு பேரணியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார சேவை உதவியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கண்டனப் பேரணி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கண்டனப் பேரணி Reviewed by Editor on September 27, 2021 Rating: 5