இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று (24) வெள்ளிக்கிழமை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் மொனராகலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான சசீந்திர ராஜபக்ஷ, தேனுக விதானகே, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான குமாரசிறி ரத்நாயக்க, ஜகத் புஷ்பகுமார, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மொனராகலை மாவட்டச் செயலாளர் குணதாச அமரசிறி, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Reviewed by Editor
on
September 24, 2021
Rating:


